குறிப்பிட்ட ஒன்றை மற்றொன்றுக்கு இணையாக ஈடு செய்வது குறியீடு எனப்படு கிறது. ஒன்றை உருவகப்படுத்திப் பார்க்க நமக்கு ஒரு வடிவமைப்பு தேவை. இதை முன்னோர்கள் சின்னம், குறியீடு என்று பல சொற்களில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

குறியீடுகள் மனிதர்களுக்கு வழிகாட்டிப் பலகைகள்போல பயன்பட்டு வருகின்றன. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்து புலனுறுப்புகளில் கண்கள் அதிக சக்தி வாய்ந்ததாகும். காணும் காட்சிகளை விரை வாகப் பதிவுசெய்து மூளைக்கு அனுப்பவல்லது. ஒளிவடிவம் அனைத்தும் வலது மூளையிலும், காதில் கேட்கும் ஒலிவடிவங்கள் அனைத்தும் இடது மூளையிலும் பதிவாகின்றன.

ஒரு குறியீட்டை நாம் தொடர்ச்சியாகப் பார்த்துவந்தால், அந்த குறியீடு நம் வலதுப்பக்க மூளையில் ஆழமாகப் பதிவாகிவிடும். அதை நாம் மனக்கண்ணில் காணும்போது, எத்தகைய வார்த்தைகளை மனம் உச்சரிக்கிறதோ, அவ்வார்த்தைகள் ஸ்தூலமாக உருவெடுக்கும்.

கோவில் பிராகாரங்களிலும் கோபுரங் களிலும் பல்வேறுவிதமான உருவங்கள் வடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு உருவமும் மனதில் ஒருவித உணர்ச்சி யைத் தூண்டக்கூடியவை. உணர்ச்சிகளுக்குத் தகுந்தாற்போல் இயங்கக் கூடியவன் மனிதன். ஒருவர் தன் இலக்கை அடைவதற்கு இத்தகைய தூண்டுதல்கள் அவசியமாகின்றன. எனவே விரும்பியதை அடைவதற்கு குறியீடுகள் பெரிதும் பயன்படுகின்றன.

Advertisment

வேண்டுதல் செய்யும் முறை பஞ்சபூதக்கூட்டு எங்கே ஏற்படுகிறதோ அங்கே ஒரு உருவாக்கம் நிகழும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். பஞ்சபூத ஆற் றலை ஓரிடத்தில் சேர்த்து, அவ்விடத்தில் என்ன சங்கல்பம் செய்தாலும் அது நடைமுறையில் நிறைவேறி வருவதை அனுபவப்பூர்வமாக உணரலாம். பொதுவாக, பூஜையின்போது மஞ்சள் அல்லது சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். இந்த பிடித்துவைத்த பிள்ளையார் மண் தத்துவத்தைக் குறிப்பார். அடுத்து அதனருகே மண் அல்லது பித்தளைக் கலசத்தில் நீர் நிரப்பி வைப்பார்கள். நீர் தத்துவத்தைச் சேர்ப்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். அடுத்து அதனருகே தீபம் ஏற்றுவார்கள். இது நெருப்பு தத்துவத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சாம்பிராணி புகை போட்டு பத்தி ஏற்றிவைப்பார்கள். இந்தப் புகை காற்றில் மணம் பரப்புவதற்காக சேர்க்கப்பட்டாலும், உண்மையில் இது காற்று தத்துவத்தைச் சேர்ந்தது. ஆகாய தத்துவம் எங்கும் நிறைந்திருக்கிறது. பின்பு கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. ஆரத்தி காட்டும்போது மணி ஓசை செய்யப்படுகிறது. கற்பூர தீபம் விந்து (ஒளி) தத்துவத்தையும், மணியோசை நாத (ஒலி) தத்துவத்தையும் குறிப்பவை யாகும்.

இப்படியாக நாம் பூஜை செய்யும் போது ஸ்தூல தத்துவங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை யும், சூட்சும தத்துவங் களான விந்துவும் நாதமும் ஓரிடத்தில் இணைகின்றன. அங்கு நாம் என்ன சங்கல்பம் செய்கிறோமோ அது எளிதில் நிறைவேறுகிறது.

மேலும் இறைவழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கடவுளின் உருவம். அந்த வடிவம் வேண்டியதைத் தரும் என்ற நம்பிக்கை மூளையில் பதிய வைக்கப்படுகிறது. கடவுள் சிலைகள் எல்லாமே ஒருவகையான அடை யாளக் குறியீடுகளே...

நோய் தீர்க்கும் சர்ப்பக் குறியீடு

Advertisment

இரண்டு பாம்புகள் ஒரு தடியை பின்னிக் கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவமனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும் காணலாம். அது மருத்துவத்துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வடிவமானது நம் கோவில் வளாகங் களிலும், அரச மரங்களின் அடியிலும் கற்சிலை களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப் பதைக் காணலாம். இவற்றை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் தீரும் என்பது அனைவரும் அறியவேண்டிய ஒன்று.

நம் முன்னோர்கள் இந்த சர்ப்பப் பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தார்கள். இதனால் ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

வியாபாரத்தில் வெற்றிதரும் குறியீடு ஜோதிடத்தில் வியாபாரத் தைக் குறிக்கும் காரக கிரகம் புதனாகும். புதன் அஸ்த நட்சத் திரத்தில் உச்சமடைகிறார். அஸ்த நட்சத்திரத்தின் குறியீடு கையாகும். எனவே வியாபாரிகள் தங்களுடைய நிறுவனங்களில் கைக் குறியீட்டை தினமும் பார்த்து வேண்டிவர, எளிதில் வெற்றியடையலாம்.

அதிகாலையில் கண் விழித்த வுடன் உள்ளங்கைகளைப் பார்ப் பது நன்று. தேவதைகள் கைகளால் வரத, அபய முத்திரை காட்டுவதும், பரத நாட்டியக் கலையில் கைகளால் முத்திரை காண்பிப்பதும், பெரியோர்களும் குருநாதர்களும் கைகளால் ஆசிர்வதிப்பதும் உள்ளங்கையின் சிறப்பை உணர்த்துவதாகும்.

போட்டிகளில் வெற்றிதரும் குறியீடு

புராண இதிகாசக் கதைகளிலிருந்து தற்காலத் திரைப்படக் கதைகள்வரை பெண்ணுக்காகப் போட்டியிடும் நிகழ்வுகளைக் காணலாம். அதாவது பெண்ணுக்காகப் போட்டியிடும் வழக்கம் பண்டைய சமூகத்தில் இருந்துள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவருக்கே பெண்ணைக் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.

ஜோதிடரீதியாகப் பார்த்தால், பெண்ணுக்கும், போட்டிக்கும் ஒரு தொடர்பிருப்பதை அறியலாம். ஜோதிட விதிகளின்படி போட்டியைக் குறிப்பது ஆறாம் பாவமாகும். லக்னமான மேஷத்திற்கு ஆறாம் பாவம் கன்னியாகும். கன்னி ராசியின் குறியீடு கன்னிப் பெண். கன்னி ராசியின் உருவத்தை சித்திரமாகவோ புகைப்படமாகவோ வைத்து வழிபட்டுவந்தால் போட்டிகளில் வெற்றி பெறலாம்.

lakshmiதொழில், உத்தியோகத்தில் வெற்றிதரும் குறியீடு ஜோதிடத்தில் தொழில் மற்றும் உத்தியோகத்தைக் குறிக்கும் கிரகம் சனியாகும். சனி உச்சமடையும் நட்சத்திரம் சுவாதி. சுவாதி நட்சத்திரத்திற்குரியது தேனீயாகும். எனவே தொழில்துறையில் எளிதில் வெற்றியடைய நினைப்பவர்கள் தேனீயின் படத்தை தொழில்செய்யும் இடங்களில் வைத்து வழிபடலாம்.

சுவாதி நட்சத்திரத்தில் நீசமடையும் கிரகம் சூரியன். இது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் குறிக்கும் கிரக மாகும். சுவாதி நட்சத்திரத்திற்குரிய தேனீயானது அரசியல் வாதிகளின் வீட்டிலோ, அரசு அதிகாரிகளின் வீட்டிலோ கூடுகட்டினால் பதவி பறிபோகும். ஆனால் தொழிலதிபர்களின் வீட்டில் கூடுகட்டினால் தொழில் வளர்ச்சியடையும்.

சனி ஆயுள்காரகன் என்பது நாம் அறிந்ததே. சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகுவை மரணக் காரகன் எனக்குறிப் பிடுவர். தேன்கூடு அல்லது தேன்கூடு படத்தைப் பார்த்து வணங்கிவந்தால் மரண பயம் நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு தரும்.

செல்வ வளம் தரும் குறியீடு

செல்வத்தைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைகிறார். மீனம் நீர் நிலையைக் குறிக்கும் ராசியாகும். அங்கே நீசமடையும் புதன் நீர்த்தாவரங்களைக் குறிக்கும். அங்கே உச்சமடையும் சுக்கிரன் மலர்ந்த தாமரைப் பூவைக் குறிக்கும். எனவே தண்ணீரில் பூத்துக்குலுங்கும் செந்தாமரை மலர் ஒரு செல்வக் குறியீடாகும். மகாலட்சுமிக்கு செந்தாமரைச் செல்வி என்று பெயர். எனவே செந்தாமரை மலர் அல்லது செந்தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் படத்தை வீட்டில் வைத்து தினமும் பார்த்துவர செல்வவளம் பெருகும்.

செல்வத்தைக் குறிக்கும் சுக்கிரன் உச்சமடையும் நட்சத்திரம் ரேவதியாகும். ரேவதி நட்சத்திரத்தின் உருவம் மீனா கும். எனவே வீட்டில் மீன் படத்தை (பூஜையில் வைத்து) மாட்டி தினமும் பார்த்து வரலாம். மேலும் நீருக்கு செல்வத்தை வசீகரிக்கும் சக்தியுண்டு. செல்வக் கடவுளான லட்சுமியை அலை மகள் எனக் குறிப்பிடுவர்.

எனவே வீட்டின் வடகிழக்கு பாகத்தில் நீரை சேமித்து வைத்தால் அந்த வீட்டில் செல்வம் பெருகும். (நீர்நிலையில் நின்றுகொண்டு நீரில் எச்சில் துப்புவது போன்ற செயல்கள் லட்சுமியை அவமதிப் பதாகும். அவர்களிடம் லட்சுமி இருக்க மாட்டாள்.)

அரசியல் வாழ்க்கையில் வெற்றிதரும் குறியீடு

ஜோதிடத்தில் சூரியனும் சந்திரனும் ராஜகிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. அரசர்களைக் குறிக்கும் கிரகம் சூரியன். அது உச்சம் பெறும் நட்சத்திரம் அஸ்வினியாகும்.

அஸ்வினி நட்சத்திரத்தின் உருவம் குதிரை யாகும். குதிரை ஒரு ராஜ அடையாளமாகும். எனவே குதிரைப்படம் அல்லது பொம்மையை வீட்டில் வைத்து தினமும் பார்த்து வந்தால் அரசியலில் செல்வாக்கு பெறலாம்.

சந்திரன் உச்சம்பெறும் நட்சத்திரம் கிருத்திகை. உருவம் கத்தி அல்லது வாள். இவை ராஜ அடையாளமாகும். கத்தி, வாள் போன்ற உருவப்படம் அல்லது நிஜ கத்தி அல்லது வாளை பூஜைசெய்து வீட்டில் வைத்து பார்த்து வந்தால் அரசியலில் செல்வாக்கு பெறலாம்.

மிருகங்களின் அரசனாகக் கருதப்படும் சிங்கம் சிம்ம ராசியின் உருவமாகக் கூறப் பட்டுள்ளது. காலபுருஷ லக்னமான மேஷத் திற்கு ஐந்தாமிடம் சிம்மமாகும். ஐந்தாம் பாவம் அரசியலைக் குறிக்கும். அரசர்கள் அமரும் இருக்கைக்கு சிம்மாசனம் என்று பெயர். சிம்மாசனங்களைப் பயன்படுத்தி வந்தாலும், சிங்க உருவத்தை தினமும் பார்த்து வந்தாலும் அரசியல் வாழ்க்கையில் வெற்றியடையலாம். அந்தக் காலத்தில் அரசர்கள் தங்கள் ராஜ்ஜி யத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அடிக்கடி சண்டிஹோமம் செய்தார்கள். சண்டி என்பவன் சிம்மவாஹினியான துர்க்கையே.

புத்திர பாக்கியம் தரும் குறியீடு

ஜோதிடத்தில் புத்திர ஸ்தானம் என அழைக்கப்படுவது ஐந்தாம் பாவமாகும். காலப்புருஷ லக்னமான மேஷத்திற்கு 5-ஆம் இடமான சிம்ம ராசியின் குறியீடு சிம்மம் என்பது நாமறிந்ததே. ஒரு நாளைக்கு 40 முதல் 50 முறை கலவியில் ஈடுபடும் தன்மையுடையது சிங்கம். அதாவது பெண் சிங்கம் கருவுறும்வரை தொடர்ந்து கலவியில் ஈடுபடக்கூடியது. பெண் சிங்கம் கருவுற்ற பின்பே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட்டு விலகும். எனவே புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் ஆண் சிங்கத்தின் படத்தைப் பூஜைசெய்து தினமும் பார்த்துவர பிள்ளைப்பேற்றை அடையலாம்.

மகம் மற்றும் பூர நட்சத்திரங்களின் மிருகம் எலி. இது 28 நாட்களுக்கு ஒருமுறை குட்டி போடும் தன்மையுடையது. அதாவது குட்டி ஈன்ற அடுத் நாளே பெண் எலி ஆண் எலியுடன் இணைந்து மீண்டும் கருவுற்றுவிடும் தன்மையுடையது. எனவே குழந்தை இல்லாதவர்கள் எலி உருவப்படத்தை பூஜைசெய்து தினமும் பார்த்து வரலாம். உடம்பில் அமைந்துள்ள மூலாதார சக்கரத்தின் அதிதேவதையான பிள்ளையாரின் வாகனமாக எலியைக் குறிப்பிடுகி றார்கள். மூலாதாரச் சக்கரம் சந்ததி விருத்தி உறுப்புகளோடு தொடர்புடையதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே அவரவருக்குத் தேவையான குறியீட்டை தினமும் மனமொன்றி வணங்கி, வேண்டினால் எண்ணியதை அடையலாம் என்பதில் ஐயமில்லை.

செல்: 98414 12523